வலைத்தமிழ் அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் உல்க் ஹோகன் 71 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்

புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் உல்க் ஹோகன் இன்று காலை 11:17 மணியளவில் திடீர் மாரடைப்பால் காலமானார்.

மல்யுத்த போட்டியுலகில் அனைத்து காலகட்டத்திலும் மிகவும் பிரபலம் வாய்ந்தவராகவும், மல்யுத்த விளையாட்டு போட்டி அதிகம் பிரசித்தி பெறவும், அவரை பின்தொடர்ந்து நிறைய பிரபலங்கள் இந்த துறைக்கு வரவும் முக்கிய காரண கரத்தாவாக இருந்தவர்   உல்க் ஹோகன் ஆவார். 

இவர் ஆறு முறை WWE சாம்பியன் பட்டமும்,  இரண்டு முறை WWE ஹால் ஆப் பேம் பட்டமும் பெற்று இருக்கிறார்.  அவரின் இழப்பு மல்யுத்த போட்டியுலகினர்  மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.     

Scroll to Top