உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தர வரிசையில் இருந்த அமெரிக்க பாஸ்போர்ட் தற்போது இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகர ஹென்லே & பாட்னார்ஸ் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தர வரிசையில் பத்தாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
ஹென்லே & பாட்னார்ஸ் கூற்றுப்படி, ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டின் தர வரிசை அதன் சிறப்பு டேட்டா மூலம் சர்வதேச வான் போக்குவரத்து கூட்டமைப்பு (IATA) கணிக்கப்படும். அந்த வகையில் ஆய்ந்து இந்த முடிவினை அறிவித்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், ஒரு பாஸ்போர்ட் என்பது வெறும் பயண ஆவணம் மட்டுமல்ல. அது அந்த நாட்டின் டிப்ளோமேட்டிக் செல்வாக்கு, பிற உலக நாடுகளோடு இருக்கும் நட்புறவு முதலியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கபட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் தர வரிசையில் உள்ளது. அதன்படி அந்த பாஸ்போர்ட் வைத்திருப்போர் 193 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். முறையே ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது தர வரிசையில் உள்ளன. அவர்கள் 190 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். அதுபோல, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் மூன்றாவது தர வரிசையில் உள்ளனர். அந்த நாட்டினர்கள் 189 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
அந்த வகையில் இந்தியா தர வரிசையில் கடந்த முறை இருந்த 85 வது இடத்தில் இருந்து 77 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தியர்கள் விசா இல்லாமலும், வருகையில் விசா பெற்றும் 59 நாடுகளுக்கு பயணிக்கலாம்.
