அமெரிக்காவில் வசிக்கும் பலரும் அறிந்து வைத்திருக்கும் விவகாரம் யாதெனில் இது மூன்றாவது காலாண்டு வரி செலுத்தும் காலம் என்பது.
அந்த வகையில், எடிசன் நகர வாசிகள் தங்களின் மூன்றாவது காலாண்டு வரிவிதிப்பு நேற்றைய 1 ஆம் தேதி ஆகத்து மாதத்துக்குள் தங்களின் வரியை செலுத்தி இருக்க வேண்டும்.
அதில் தற்போது எடிசன் நகர முனிசிபல் கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, வரிவிதிப்பு செலுத்தும் காலத்தை நீடித்து உள்ளது.
அதாவது, மேற்படி 1 ஆம் தேதி ஆகத்து மாதம் செலுத்த வேண்டிய வரியை, அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வரை செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
இது வரி செலுத்துவோருக்கு கூடுதலாக 25 நாட்கள் கால அவகாசம் வழங்குவதுடன், வட்டியில்லாமல் வரியை செலுத்தவும் வழிவகை செய்துள்ளது.
