வலைத்தமிழ் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரில் இருக்கும் சர்வதே நீதிமன்றம்  கடந்த புதன் கிழமை லேண்ட் மார்க் கவன ஈர்ப்பு அட்வைஸ் கருத்தினை பிறப்பித்து உள்ளது. அதன்படி, புவி கிரகத்தின் பருவநிலை மாற்றத்தை தடுக்க, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாத நாடுகள் பன்னாட்டு சட்டங்களை மீறிய குற்றத்துக்கு உள்ளாவதுடன், சர்வதேச அளவில் தவறிழைத்த தண்டனைக்கும் ஆளாக நேரிட்டு , அதற்கு பரிகாரம் மற்றும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்” என்று அறிவித்துள்ளது. 

 பன்னாட்டு நீதிமன்ற தலைவர் யுஜி ல்வாசவா கூறும் போது, நமது புவியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கு இருக்கிறது. “Clean, Healthy and sustainable environment”  என்பது மனித மனித உரிமையாகும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.  

Scroll to Top