கொலம்பியாவைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பில் பத்து அடி உயரம், சுமாராக 220 பவுண்டு எடை கொண்ட, அதி பயங்கர தாக்குதலை தொடுக்கும் வல்லமை கொண்ட ராட்சச பறவையின் எழும்புக்கூட்டை கண்டறிந்து உள்ளனர்.
இந்த ராஜாளி வகை பறவை சுமாராக 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், இரையை தேடுவாதற்காக தரைக்கு வந்தபோது அதைவிட உருவத்தில் சிறிய மிருகம் அல்லது நீர் நிலையில் அமர்ந்து இருந்த போது முதலை போன்றவற்றால் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து இறக்கக் கூடும் என்று அந்த பறவையின் புதைபடிவ எலும்பில் இருந்த கடி தழும்பு தெரிவிப்பதாக அந்த குழுவினர் கூறியுள்ளனர்.
