வலைத்தமிழ் அமெரிக்கா

அமெரிக்காவில் சிக்கிய குமரி வாலிபரை மீட்ட, வடஅமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் இடர்கால உதவிக்குழு(Tamil ER) – மேனாள் நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆல்பர்ட் செல்லதுரை அவர்களின் சீரிய பணி

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த அப்பாவு என்பவரின் மகன் தினேஷ்  ஆவார். இவர், சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் மாகாணத்தில் முதலில் வேலை செய்து வந்துள்ளார். பிறகு, 2023 இல் அந்த வேலையை விட்டுவிட்டு, புதிதாக நிறுவனம் தொடங்க நியூ யார்க் மாகாணத்துக்கு இடம் பெயர்ந்து அங்கு இரண்டு கம்பெனிகள் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார்.  அப்போது, ஜூலை 19 ஆம் தேதி, அவர் இந்தியா கிளம்பி ஊருக்கு கிளம்பி வருகையில்,  நியூயார்க் நகர மனநல மருத்துவ காப்பகத்தில் இனம் புரியாத காரணத்தால் காவலில்  அடைக்கபட்டு இருப்பதாக தகவல் தெரிய வருகிறது!

இந்நிலையில், இந்த செய்தி அவர்களின் பெற்றோர்கள் தமிழகம், இந்தியாவில் கொடுத்த புகார் மற்றும் ஊடக பேட்டிகள் காட்டுத் தீயாக பரவத் தொடங்கியது. இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.  கனிமொழி அவர்கள் உடனடியாக  இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த இளைஞரை மீட்க வட அமெரிக்காவில் இயங்கி வரும் வட அமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பின்  இடர் கால குழுவுக்கும், இந்திய தூதரகத்துக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

அதனடிப்படையில், பெட்னா இடர்கால உதவிக் குழு (Tamil ER) சட்டென களத்தில் இறங்கியது. மேற்படி, குழு தமிழ்ச் சமூகத்துக்கான அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு எந்த பிரச்சனை எழுந்தாலும் உடனடியாக  தலையிட்டு அந்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லமை கொண்டதாகும். இதுவரை இவர்கள் இதுபோல பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருப்பது குறிப்படத்தக்கது. இந்த குழுவில் அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் இருந்து நிறைய பேர்கள் தன்னார்வலர்களாக இணைந்து அரும்பணி ஆற்றி வருவதும் சிறப்பு அம்சம் ஆகும். 

அந்த வகையில், நியூயார்க் மாகாண மேனாள்  தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஆல்பர்ட் செல்லத்துரை அவர்களின் தலைமையில் குழு களத்தில் இறங்கி அதற்கான பணிகளை சீரும் சிறப்புமாக செய்து, அந்த வாலிபரை மீட்கும் பணியில் இறங்கி விட்டிருந்தனர்.  இந்த குழுவில் அவரின் புதல்வர் ஜான் ஆல்பர்ட் என்பவரும் முக்கியமானவர்கள். அவர்கள், உடனே  அந்த மனநல காப்பாகத்து சென்று கூடவே நியூயார்க் இந்திய தூதரக அதிகாரி உதவியுடன் அந்த வாலிபரை மீட்பதற்கு வேண்டிய அனைத்து வேலைகளையும், கடந்த செவ்வாய் கிழமை இரவே செய்து முடித்து விட்டனர்.  

இந்நிலையில், மேற்படி இரண்டு தினங்களுக்கு முன்பாகவே அந்த வேலையை  முடித்துவிட்டு, ஐயா ஆல்பர்ட் செல்லத்துரை நமது வலைத் தமிழ் அமெரிக்கா ஊடகத்து போன் செய்து, “அந்த வாலிபரை விடுதலை செய்ய அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டது. அவர் இன்னும் இரு தினங்களில் விடுதலை அடைந்து விடுவார். ஒருவேளை, அந்த வாலிபர் இந்தியா செல்வதற்கு உடன் ஒருவர் உதவிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், யாராவது ஒருவரை உடன் அனுப்ப வேண்டும். நாங்களும் உதவிக்கு ஒருவரை தேடி வருகிறோம், நீங்களும் யாராவது தன்னார்வலர் இருந்தால் உதவுங்கள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையை    எடுத்து வைத்து இருந்தார் என்பது இங்கு குறிப்படத் தக்கது. அவரின் கோரிக்கைக்கு நமது ஊடகம் சார்பாகவும் ஒரு தன்னார்வலரை தயார் நிலையில் வைத்து இருந்தோம். 

மேற்படி, பெட்னா இடர்கால உதவிக் குழு (Tamil ER) மற்றும் அதன் சார்பாக களம் இறங்கிய திரு. ஆல்பர்ட் செல்லதுரை மற்றும் அவரின் புதல்வர் ஜான் ஆல்பர்ட் அவர்களின் சீரிய மற்றும் துரித நடவடிக்கையால், மேற்படி தினேஷ் என்கிற சிக்கலில் மாட்டியிருந்த  வாலிபரை  பத்திரமாக மீட்டு இன்று  தாயகம் அனுப்பி வைத்துள்ளார். 

பெட்னா இடர்கால உதவிக் குழு (Tamil ER) மற்றும் அதன் சார்பாக களம் இறங்கிய திரு. ஆல்பர்ட் செல்லதுரை மற்றும் அவரின் புதல்வர் ஜான் ஆல்பர்ட் அவர்களின் உடனடி மனிதாபிமான மற்றும் சீரிய உதவிக்கு வலைத் தமிழ் அமெரிக்க ஊடகம் வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறது! 

  



Scroll to Top