வலைத்தமிழ் அமெரிக்கா

அமெரிக்கா டெக் நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்காக இருக்க வேண்டும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் பல டெக் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள்  தங்களின் தொழிற்சாலைகளை சீன நாட்டில் நிறுவி, அதன் முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இந்தியர்கள் மற்றும் சீனர்களை பணியாளர்களாக நியமித்து வருகின்றனர். இது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை மட்டு படுத்துவதுடன், அமெரிக்காவின் சுதந்திரத்தையும் சீர் குலைய வைத்துள்ளன. 

மேற்படி நிறுவனங்கள் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதை விட, அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும். அப்படி செய்வதால் அமெரிக்க குடிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கிட்டு சூழல் உருவாகும். 

ஆகவே, இனி அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான நிறுவனமாக இருக்க வேண்டும்” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   

 

Scroll to Top