ஹாக்கியைப் பொறுத்தளவில் இந்தியாவின் வரலாறு சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1970 வாக்கில் இந்திய மகளிர் அணியும் ஹாக்கியில் களம் கண்டது. ஆனால், ஐஸ் ஹாக்கியில் இந்தியாவின் என்ட்ரி 2009-ல்தான் தொடங்கியது.
அதுவும் முதலில் ஆடவர் அணிதான் களமிறங்கியது. அதன்பின்னர், 7 ஆண்டுகள் கழித்து 2016-ல்தான் ஐஸ் ஹாக்கியில் இந்திய மகளிர் அணியினர் என்ட்ரி கொடுத்தனர்.
அந்த என்ட்ரி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இந்திய மகளிர் அணியின் பயணமானது, குளிர்காலத்தில் உறைபனிக்குப் பெயரான லடாக் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் தொடங்கியது.
