வலைத்தமிழ் அமெரிக்கா

நியூ ஜெர்ஸி டர்ன்பைக்கில் தீப்பற்றி எரிந்த பிக் அப் டிரக் – முழுவதுமாக சேதம்

நேற்று நெவார்க் அருகே நியூ ஜெர்ஸி டர்ன் பைக்கில் சென்று கொண்டிருந்த பிக் அப் டிரக் திடீரென்று தீப்பற்றிய எரியத் தொடங்கியது. 

எப்போதும் போக்கும் வரத்துமாக அதிக வாகனங்கள் சாலையில் பயணிக்கும்நியூ ஜெர்ஸி டர்ன் பைக்கில் இந்த விபத்து நிகழ்ந்தது அந்த நேரத்தில் சாலையில் பயணித்த பயணிகள் மத்தியில் பீதியை கிளப்பியது. 

சற்று நேரத்தில் மளமளவென பற்றிய தீயால், அந்தப் பகுதியில் பெரும் கரும் புகை கிளம்பி சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூராகவும் அமைந்துவிட்டது. அவசர உதவி குழுவினர் வந்து தீயினை அணைத்தனர். ஆயினும், அந்த வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. நல்லவேளையாக, உயிர்ச் சேதம் ஏதும் நிகழவில்லை.    

Scroll to Top