வலைத்தமிழ் அமெரிக்கா

20 போலி பெயர்கள், 7 சோஷியல் செக்யூரிட்டி நம்பரை பயன்படுத்தி கொரோனா காலம் முதல் போலியாக வைத்தியம் பார்த்து வந்த பென்சில்வேனியா பலே கில்லாடி பெண் நர்ஸ் கைது

பென்சில்வேனியா மாகாண போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், ஒரு பெண்ணின் காரினை ஓரம் கட்டி நிறுத்தியபோது, அந்த பெண்மணி போலியான அடையாள ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து உள்ளார். அதனை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் காரினை முழுமையாக சோதனை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. 

அந்த பெண்ணின் பெயர் ஷனன் நிக்கோல் வோமேக் , வயது 39, ஆகும். அவரது காருக்குள் ஏராளமான போலி அடையாள அட்டைகள், ஆள்மாறாட்ட ஆவணங்கள், போலியான நிறுவன ஆவணங்கள், என்று நிறைய ஆதாரங்கள் கிட்டியுள்ளன. மேலும், அவர் தன்னை ஒரு அனுமதி மற்றும் உரிமம் பெற்ற பதிவு செய்யபட்ட ஒரு நர்ஸ் என்றும், மறுவாழ்வு மையம் போன்ற பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும்  நிறைய  பதிவு செய்யபட்ட  நிறுவனத்துக்கு சூப்பர் வைசர் ஆக வலம் வந்ததும் விசாரணையில் கண்டுபிடித்து உள்ளனர். 

இவர் கொரோனா பெருந் தொற்று ஏற்பட்ட 2020 காலத்தில் மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோரின் தேவையும் சேவையும் அதிகம் தேவைபட்டதால், இவர் அந்த சூழநிலையை சாதகமாக பயன்படுத்தி, இப்படி அடுத்தவரின் அடையாளங்கள், போலியான நர்ஸ் அனுமதி உரிமம் முதலியவற்றை பயன்படுத்தி நிறைய தொடர்  மோசடியில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று போலீஸ் விசாரணையில் தெரிவிக்கின்றனர்.    

Scroll to Top