வலைத்தமிழ் அமெரிக்கா

கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு – மேலோங்கும் தமிழர் பெருமை!

தமிழர் நாகரீகமும்,பெருமைகளும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் அதிகம் மிளிரத் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளும், சங்க இலக்கிய பாடல்களும் மட்டும்தானே? அதெல்லாம் ஒரு ஆதாரமா? என்று வினா எழுப்பிய அதிமேதாவிகள் தற்போது தொடர்ந்து கிடைத்து வரும் கீழடி, கொடுமணல், ஆதிச்ச நல்லூர் போன்ற அகவாழ்வின் ஆராய்ச்சிகள் வெளிக்கொணரும் உண்மைகள் , புறம் பேசியோரை   மூக்கின் மேல் விரலை வைத்து மௌனம் சாதிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருப்பது தமிழர் தொன்மையான நாகரீகத்தின் மீதான பார்வையில் பொதிந்து கிடக்கும் உண்மை விஸ்வரூபம் கொண்டு வெளி வரத் தொடங்கிவிட்டது என்று ஓட்டுமொத்த தமிழினமும் பெருமை கொள்ளலாம். 

சென்ற வாரம் நடந்தேறிய முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவில் தமிழ் மன்னருக்கு ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியீட்டு, ராஜராஜ சோழர் மற்றும் அவரது புதல்வர் ராஜேந்திர சோழர் ஆகியோருக்கு பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி  அறிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. 

இந்த சூழ்நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “ராஜேந்திர சோழருக்கு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்றும் , அங்குள்ள சோழகங்கம் ஏரியில் 19.25 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்.     

அத்தோடு யுனஸ்கோ அமைப்பு சமீபத்தில் , செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்து இருப்பதையும் இங்கு நினைவு கூர்க। 

இதையெல்லாம் உற்று நோக்குகையில், மெல்ல மெல்ல நமது தமிழர் பெருமை நாடறிய, உலகறிய உயர்ந்து வருகிறது என்பது தெளிவாக விளங்கும். இது தமிழர்களாகிய நாமனைவருக்கு பெருமை சேர்க்கும் விஷயமே!  

Scroll to Top