வலைத்தமிழ் அமெரிக்கா

நேற்று நியூஜெர்ஸியில் நிலநடுக்கம்

நேற்று நியூ ஜெர்ஸியின் வட மாகாணம் மற்றும் நியூயார்க் மாகாணம் ஆகியவற்றின் ஒரு சில பகுதியில் சுமாராக இரவு 10.20 மணியளவில் சிறிய அளவில் நில நடுக்கம் உணரபட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 3.0 மேக்னிடியுடு அளவாக இருந்தது.  

US ஜியாலஜிகல் சர்வே “பெநியூ ஜெர்ஸி மாகாண பெர்கன் கவுண்டியில்   ஹஸ்பரக் ஹெயிட்ஸ்   என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் இரவு 10.18 மணியளவில் நிகழ்ந்து  இருப்பதை உறுதி படுத்தியுள்ளது.

மேலும் ஜெர்ஸி , பெர்கன், மோரிஸ், எஸ்க்ஸ்  முதலிய நகரங்கள் மற்றும் நியூ யார்க் நகரின் சில இடங்களில் லேசான நில நடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாக அவர்களின் சமூக வலைத்தள  பக்கங்களில் தெரிவித்து இருக்கிறார்கள். 

Scroll to Top