வலைத்தமிழ் அமெரிக்கா

தாய்ப்பால் தானமாக கொடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க பெண்மணி

வட அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த அலைசா ஒக்லட்ரீ என்ற 36 வயது பெண்மணி தாய்ப்பால் தானம் கொடுப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து உலகுக்கு உணர்த்த 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி தற்போது கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். 

இது இவரின் முதல் சாதனை அல்ல. இவரே இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு 1,569.79 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 

அந்த முயற்சியும் ஊக்கமும் அதன் வாயிலாக சமூகத்தில் கிடைத்த அங்கீகாரத்தையும் மனதில் கொண்டு, தற்போது இந்த புதிய சாதனையை நிகழ்த்தி முடித்து இருக்கிறார் அலைசா ஒக்லட்ரீ . 

ஒரு குழந்தைக்கு மூன்று அவுன்ஸ் வீதம் பயன்படுத்தினாலும் அவர் கொடுத்த தாய்ப்பால் தானத்தை வைத்து 3,50,000 குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அவர் பெருமிதம் தெரிவிக்கிறார். 

மேலும், அவர் தாய்ப்பால் தானம் கொடுத்த வட டெக்ஸாசின் தாய்ப்பால் வங்கியின் செய்தியானது ,  “ஒரு லிட்டர் தாய்ப்பால் 11 குழந்தைகளுக்கு உதவும். அந்த வகையில் அலைசா ஒக்லட்ரீ  அவர்களின் கொடையின் வாயிலாக அவர் 3,50,000 குழந்தைகளுக்கு மேல் பயனுற உதவியிருக்கிறார்” என்று பாராட்டும் தெரிவித்து இருக்கிறது. 

Scroll to Top