வலைத்தமிழ் அமெரிக்கா

அயர்லாந்து நாட்டில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்தியர்கள் – தூதரகத்தின் எச்சரிக்கை ரிப்போர்ட்

அயர்லாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து அவர்கள்  மீதான தொடர் தாக்குதல்கள், கத்திக்குத்து, முதலிய வன்முறை சம்பவங்கள் அங்கு வசிக்கும் ஏனைய இந்தியர்களுக்கு அச்சத்தையும், பீதியையும் அதிகரித்து உள்ளது. 

இதுகுறித்து அறிந்த, அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் இருக்கும் இந்திய தூதரகம் தமது குடிமக்களுக்கு ” தமது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும், சீரற்ற நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு, தாக்குதல் குழுவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படியும் ” எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அயர்லாந்து நாட்டின் இந்தியர்கள் மீதான தொடர் தாக்குதலில் ஈடுபடுவர்கள்  “இளம் வயது வாலிபர்கள் என்பதும், அவர்கள் குழுவாக சேர்ந்து இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Scroll to Top