அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஆசியாவை தாண்டி உலகின் மிகப்பெரும் சுவாமி நாராயணன் அக்க்ஷகர்தம் கோவில் ராபின்ஸ் வில்லே நகரத்தில் 183 ஏக்கர் பரப்பளவில் கடந்த அக்டோபர் 8, 2023 இல் திறக்கபட்டுள்ளது.
ஆன்மீக குருவான யோகிஜி மகாரஜிற்கு எழுப்பிய இந்த கோவிலின் வடிவமும், அமைப்பும், கோவிலுக்குள் நிறுவியிருக்கும் பல்லாயிரக்கணக்கான சிற்பங்களும் , தூண்களும், ஓவியங்களும், வெண் பளிங்கு கற்களும் பிரம்மாண்டமானவை. இது இந்துக்களின் உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது!
இந்த கோவிலை நிர்மாணம் செய்ய ஏராளமான தன்னார்வலர்கள், இறையார்வலர்கள், மாணவர்கள், வள்ளல்கள் முதலியோர் ஏராளமான நன்கொடைகளை வழங்கியும், பணியில் ஈடுபட்டும் தங்களின் பங்களிப்பை செய்து முடித்து இருக்கிறார்கள்.
இந்தியாவின் குஜராத் மற்றும் டில்லி மாநிலங்களில் மட்டுமே இருக்கும் இந்த கோவில் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கோவிலாக நிறுவியிருக்கிறார்கள்.
இந்த கோவில் இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் பண்டைய குறியீடு, நியூ ஜெர்ஸி மாகாணத்தின் சட்டங்களின் ஒருங்கமைவு , ஆன்மீக அருங்காட்சியகம், பரப்புரை கூடம், தியானக் கூடம் என ஏராளமான அம்சங்களோடு அமெரிக்காவின் பெரிய இந்து கோவில் என்கிற பெருமையை தாங்கி அமைந்துள்ளது.
