ஆஸ்திரேலியாவுக்கும் பப்புவா கினியாவுக்கும் கிழக்கில் தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்று துவளு தீவு ஆகும். இதன் மொத்த நிலபரப்பளவு 25.14 கிலோ மீட்டர் ஸ்கொயர் ஆகும். இங்கு சுமாராக 2022 கணக்கெடுப்பின் படி 10,643 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தீவு முதலில் பிரிட்டிஷ் காலனியின் ஆத்திக்கத்தில் இருந்து கடந்த அக்டோபர் 1, 1978 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று , அதன் பிறகு மன்னராட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேற்படி தீவுதான் இயற்கையின் சமநிலை தவறி வருவதாலும், பருவ நிலையில் மாற்றம் நிகழ்ந்து வருவதாலும் கடலில் மூழ்கு அபாயத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது, அடுத்து வரும் 25 ஆண்டுகளில் அந்த தீவு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
நாசாவின் கடல் மட்டம் குறித்து ஆராய்ந்து வரும் குழுவானது, “கடந்த 2023 ஆம் ஆண்டு துவளு தீவின் கடல் நீர் மட்டம் சென்ற முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த வழக்கத்தை விட, 15 சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் அந்த தீவின் அதிகபட்ச நிலப்பரப்பு அடுத்து வரும் 2050 ஆண்டு கடல் கோளுக்கு உட்பட்டு அழிந்துவிடும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த புள்ளிவிவரம் அங்கிருக்கும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவே, துளுவத் தீவின் அரசாங்கம் இதிலிருந்து மீளுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள துவங்கி விட்டனர். அதாவது, துளுவ தீவில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வேறு நாட்டில் குடியாமர்த்துவதே அந்த திட்டமாகும்.
இதன் விளைவாக, அவர்களுக்கு உதவ ஆஸ்திரேலியா அரசாங்க முன்வந்து இருக்கிறது. இரு தரப்பு ராஜாங்க உடன்பாட்டின் படி, அவர்களுக்குள் பேல்பிலி யூனியன் ட்ரீட்டி ஏற்படுத்தி உள்ளனர். அதன்படி, ஆண்டுக்கு 280 நபர்கள் வீதம் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியேறிகளாக குடியேறிக் கொள்ளலாம்.
இதிலிருந்து மானுட குலம் அறிந்து கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கையாக இருக்க இயற்கை உணர்த்தும் செய்தி ஒன்றுதான். “இந்த பூவுலகு இந்த மண்ணில் உதித்த அனைத்து ஜீவராசிகளுக்கு பொதுவான, சொந்தமான ஒன்று! அதுபோல, அதனை போற்றி பேணி பாதுகாக்க வேண்டிய கடமையும் அனைவருக்கும் உரியது. இதைத்தான் சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலும் நமக்கு எடுத்து இயம்புகிறது.
ஆகவே, இயற்கையை நேசிப்போம். பாதுகாப்போம். இயற்கையை பாதுகாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். அது முடியவில்லை என்றாலும், சிறுதுளி தீதும் இயற்கைக்கு விளைவிக்காமல் இருப்போமாக!
