உலகின் சிறந்த பத்து விமான நிலையங்களின் தர வரிசை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் 99 புள்ளிகள் பெற்று துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதில் இரண்டாவதாக, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், மூன்றாவதாக கத்தாரின் தோஹா ஹமாத் விமான நிலையம், நான்காம் இடத்தில் யுஎஇ யின் அபுதாபி ஜயத் விமான நிலையம், ஐந்தாவதாக யுஎஇ யின் துபாய் விமான நிலையம், ஆறாவதாக , ஹாங்காக் விமான நிலையம், ஏழாம் இடத்தில் ஹெல்சிங்கி – வண்டா விமான நிலையம் , எட்டாம் இடத்தில் ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் இடம் பெற்றுள்ளது.
இதில், ஒன்பதாவது இடத்தில் 84 புள்ளிகள் பெற்று இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் விமான நிலையம் உள்ளது. அதுபோல, பத்தாவது இடத்தில் தென் கொரியாவின் இன்ச்சோன் விமான நிலையம் உள்ளது.
