வலைத்தமிழ் அமெரிக்கா

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க அணியினர் புதிய உலக சாதனை

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக அளவிலான நீச்சல் போட்டியில் கலப்பு நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் அணியினர் உலக சாதனை நிகழ்த்தி உள்ளனர். 

சிங்கப்பூர் நாட்டில் உலக அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. அதில் 4 x 100  மீட்டர், “பிரிஸ்டைல் ரிலே” இறுதி போட்டியில் “ஜாக் அலெக்ஸி,  பேட்ரிக் சம்மன், டோரி அஸ்கே மற்றும் கேட் டக்ளஸ்  அடங்கிய  அமெரிக்கா அணியினர் 3 நிமிடம் 18.48 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்து, தங்கப் பதக்கம் வென்றனர்.

அதே போல, பெண்களுக்கான 800 மீட்டர் நீச்சல் போட்டியில்  லெடுக்கி என்ற பெண்மணி தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இவர் ஏற்கனவே பல தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்தவர் என்பது குறிப்படத் தக்கது.  

 

Scroll to Top